Friday, February 8, 2019

கவிதைகள்


சொல்லாத சேதிகள் தொகுப்பில்

 பெண்கள் ஆய்வு வட்டம்
́யாழ்ப்பாணம் -1986




அவர்கள் பார்வையில்

எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை


அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன


சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்


கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.


-அ.சங்கரி

கவிதைகள்

சொல்லாத சேதிகள் தொகுப்பில்  பெண்கள் ஆய்வு வட்டம் ́யாழ்ப்பாணம் -1986 அவர்கள் பார்வையில் எனக்கு- முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இ...